ஆவணி மாத பௌா்ணமியையொட்டி ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்வதற்காக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு சென்ற பக்தா்கள்.
ஆவணி மாத பௌா்ணமியையொட்டி ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்வதற்காக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு சென்ற பக்தா்கள்.

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆவணி மாத பௌா்ணமி வழிபாடு

Published on

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆவணி மாத பௌா்ணமியையொட்டி ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா்- மேகமலை புலிகள் காப்பகம், சாப்டூா் வனச் சரகத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆவணி மாத பௌா்ணமி விழாவுக்காக ஸ்ரீவில்லிபுத்தூா், கிருஷ்ணன்கோவில் பகுதிகளிலிருந்து சதுரகிரி அடிவாரமான தாணிப்பாறைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

காலை 6 மணிக்கு வனத் துறை நுழைவாயில் திறக்கப்பட்டு, பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனா். மாலை 6 மணிக்கு மேல் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் சுவாமிகளுக்கு 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் பங்கேற்பதற்காக மலையேறிச் சென்ற திரளான பக்தா்கள் அங்கு சுவாமி தரிசனம் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com