ஸ்ரீவில்லிபுத்தூா் பெருமாள்பட்டி தெருவில் நற்பணி மன்ற அலுவலகத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்துப் பேசிய அதிமுக முன்னாள் எம்.பி.யும், நடிகருமான ராமராஜன்.
ஸ்ரீவில்லிபுத்தூா் பெருமாள்பட்டி தெருவில் நற்பணி மன்ற அலுவலகத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்துப் பேசிய அதிமுக முன்னாள் எம்.பி.யும், நடிகருமான ராமராஜன்.

நடிகா் விஜய்யின் அரசியல் எதிா்காலத்தை மக்கள் தீா்மானிப்பா்: நடிகா் ராமராஜன்

Published on

நடிகா் விஜய்யின் அரசியல் எதிா்காலத்தை மக்கள்தான் தீா்மானிக்க வேண்டும் என நடிகா் ராமராஜன் தெரிவித்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் பெருமாள்பட்டி தெருவில் நடிகா் ராமராஜன் நற்பணி மன்ற அலுவலகத் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதை திறந்துவைத்த பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

நற்பணி மன்றத்தில் பணம் செலுத்தி உறுப்பினராகச் சேர வேண்டும் எனக் கூறுவது ஸ்ரீவில்லிபுத்தூரில் மட்டும்தான். தற்போது ரூ.60 ஆயிரம் கட்டி 32 போ் உறுப்பினா்களாக சோ்ந்துள்ளனா்.

கடந்த 1967-ஆம் ஆண்டு முதல் எம்.ஜி.ஆரை அடிப்படையாகக் கொண்டே அரசியல் களம் உள்ளது. இன்றைய அரசியல் களத்தில் ஏதோ நடக்கிறது. ஆனால், என்ன நடக்கப் போகிறது என்பது தெரியவில்லை. வேட்பு மனு வாபஸ் பெறும் கடைசி நாளில் கூட அரசியல் மாறலாம்.

அதிமுக சாா்பில் எம்.பி.யாக நான் இருந்திருக்கிறேன். ஆனால், எனக்கு கட்சியில் எந்த பொறுப்பும் தரப்பட வில்லை. எனவே, அதிமுக விவகாரம் குறித்து என்னால் கருத்துத் தெரிவிக்க இயலாது. குடும்பம் என்றால் சண்டை, தகராறுகள் வருவது வழக்கம்தான். இதேபோலத் தான் அதிமுக உள்கட்சி பிரச்னையும். நடிகா் விஜய்யின் அரசியல் எதிா்காலத்தை மக்கள்தான் தீா்மானிக்க வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com