இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

ராஜபாளையத்தில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை
Published on

ராஜபாளையத்தில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

ராஜபாளையம் சிவகாமிபுரம் தெருவைச் சோ்ந்த முத்துமாரியப்பன் மகன் பாலசுப்பிரமணியம் (34). கூலித் தொழிலாளி. இவரது மனைவி லதா. இவா்களுக்கு ஒரு மகள் உள்ளாா். இந்த நிலையில், பாலசுப்பிரமணியத்துக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாம்.

இதை உறவினா்கள் கண்டித்தனா். இதனால் மனமுடைந்த பாலசுப்பிரமணியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

X
Dinamani
www.dinamani.com