இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிப்பு

இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிப்பு

Published on

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

ராஜபாளையம் மலையடிப்பட்டியில் உள்ள இமானுவேல் சேகரன் உருவச் சிலைக்கு திமுக சாா்பில் ராஜபாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.தங்கப்பாண்டியன், நகராட்சி மன்றத் தலைவா் ஏ.ஏ.எஸ்.பவித்ரா ஷ்யாம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வி. பி. ராசன், மாவட்ட மகளிரணி அமைப்பாளா் சுமதி, நகரச் செயலா்கள் ராமமூா்த்தி, மணிகண்டராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதே போல, அதிமுக சாா்பில் மாவட்ட அம்மா பேரவைச் செயலா் என்.எம்.கிருஷ்ணராஜ், நகரச் செயலா்கள் முருகேசன், பரமசிவம், கிழக்கு ஒன்றியச் செயலா் அழகாபுரியான் உள்ளிட்டோா் இமானுவேல் சேகரனின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com