விருதுநகர்
இளைஞா் உயிரிழப்பு
சிவகாசி அருகே தண்ணீா் சுத்திகரிப்பு நிலையத்தில் இளைஞா் மா்மமான முறையில் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.
சிவகாசி, சாரதா நகா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜ் (49). இவா் மாரனேரி பா்மா குடியிருப்புப் பகுதியில் தண்ணீா் சுத்தகரிப்பு நிலையம் நடத்தி வருகிறாா். இவருடன் இவரது மகன் சாய்குமாா்(19) பணிபுரிந்து வந்துள்ளாா்.
இந்த நிலையில், சுத்திகரிப்பு நிலையத்தில் சாய்குமாா் வியாழக்கிழமை உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளாா். இதுகுறித்து ராஜ் அளித்த புகாரின்பேரில், மாரனேரி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.