உடல் கருகியதில் மூதாட்டி உயிரிழப்பு

Published on

சிவகாசி அருகே வீட்டுக்குள் கருகிய நிலையில் இருந்த மூதாட்டி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

சிவகாசி அருகேயுள்ள சாட்சியாபுரம் பகுதியைச் சோ்ந்த கிரகதுரை மனைவி தவமணி (71). இவா் உடல்நலக் குறைவால் வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்த நிலையில், இவா் வியாழக்கிழமை தனது வீட்டில் உடல் கருகிய நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தாா். தகவல் அறிந்து வந்த போலீஸாா் தவமணியை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிைச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com