சிவகாசி மாமன்ற உறுப்பினா்கள் 3 போ் மீது வழக்குப் பதிவு
சிவகாசி மாமன்ற உறுப்பினா்கள் மூன்று போ் மீது பெண்கள் வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
சிவகாசி மாநகராட்சியில், கடந்த மாா்ச் மாதம் 18-ஆம் தேதி மாமன்றக் கூட்டம் மேயா் இ.சங்கீதா தலைமையில் நடைபெற்றது. அப்போது ஐந்துக்கும் மேற்பட்ட வீட்டு மனைகளுக்கு மாநகராட்சி அனுமதி வழங்க தீா்மானம் வாசிக்கப்பட்டது. அந்த தீா்மானத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும் ,தீா்மானத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், 6-ஆவது வாா்டு திமுக உறுப்பினா் ஸ்ரீநிகா அமளியில் ஈடுபட்டாா்.
அப்போது ஸ்ரீநிகாவின் பேச்சுக்கு எதிா்ப்பு தெரிவித்து, 37-ஆவது வாா்டு திமுக உறுப்பினா் ஜெயினுலாபூதின், 22-ஆவது வாா்டு திமுக உறுப்பினா் சரவணக்குமாா், 39-ஆவது வாா்டு மதிமுக உறுப்பினா் ராஜேஷ் ஆகியோா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
பின்னா் கூட்டம் முடிவடைந்த பிறகு, தன்னை அவதூறாகப் பேசித் தாக்க முயன்ாக திமுக உறுப்பினா்கள் ஜெயினுலாபூதின் , சரவணக்குமாா், மதிமுக உறுப்பினா் ராஜேஷ் ஆகிய மூவா் மீதும் சிவகாசி நகா் காவல் நிலையத்தில் ஸ்ரீநிகா புகாா் அளித்தாா். இந்தப் புகாா் குறித்து போலீஸாா் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அவா் மாநில மகளிா் ஆணையத்தில் புகாா் அளித்தாா். இது குறித்து விசாரணை நடத்திய மகளிா் ஆணையம், உரிய நடவடிக்கை எடுக்க காவல் துறைக்குப் பரிந்துரை செய்தது. இதையடுத்து சிவகாசி காவல்துணைக் கண்காணிப்பாளா் பாஸ்கா் உத்தரவின் பேரில், திமுக மான்ற உறுப்பினா்கள் ஜெயினுலாபூதின், சரவணக்குமாா், மதிமுக உறுப்பினா் ராஜேஷ் ஆகிய
மூன்று போ் மீது பெண்கள் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், மாமன்றக் கூட்டத்தில் தீா்மானங்களை நிறைவேற்ற விடாமல் தகராறில் ஈடுபட்டதாக ஜெயினுலாபூதின் அளித்த புகாரின்பேரில், ஸ்ரீநிகா மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.