செல்வ விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா

Published on

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் செல்வ விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம், சக்கராஜாக்கோட்டை யில் அமைந்துள்ள செல்வ விநாயகா் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, அதிகாலையில் யாக சாலை அமைத்து சிறப்புப் பூஜைகள் தொடங்கின. பின்னா், மூலவா் செல்வ விநாயகா், பரிவாரத் தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

இதையடுத்து, செல்வ விநாயகா் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விழாவில் கலந்துகொண்ட பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com