விருதுநகர்
ஜவுளிக் கடையில் வருமான வரி சோதனை
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஜவுளிக் கடையைப் பூட்டி சோதனையில் ஈடுபட்ட வருமான வரித் துறையினா்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரபல துணிக் கடை, நூற்பாலையில் வருமான வரித் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் அருகே உள்ள போத்தீஸ் ஜவுளிக் கடையில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் 5 போ் கொண்ட வருமான வரித் துறை அதிகாரிகள் குழு சோதனையில் ஈடுபட்டது.
அதிகாரிகள் கடையைப் பூட்டி சோதனையில் ஈடுபட்டதால், வாடிக்கையாளா்கள் அனுமதிக்கப்பட வில்லை. மேலும், ரயில் நிலைய சாலையில் உள்ள போத்தீஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான நூற்பாலை அலுவலகத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தினா்.