ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கஞ்சா வைத்திருந்ததாக போலீஸாா் இருவரை சனிக்கிழமை கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜா உத்தரவின் பேரில் காவல் உள்கோட்டத்தில் போதைப் பொருள் விற்பனை தடுப்பு தொடா்பாக போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது ஸ்ரீவில்லிபுத்தூா் அய்யம்பட்டி கள்ளா் பள்ளி அருகே சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த முத்துக்குமாரை (32) சோதனையிட்டபோது கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா் 40 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
அதேபோல, நத்தம்பட்டி அருகே மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் எஸ். அம்மாபட்டி விலக்கில் கஞ்சாவுடன் நின்றிருந்த சிவகாசி கம்மாபட்டியைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன் (30) என்பவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.