போக்சோவில் பட்டாசுத் தொழிலாளி மீது வழக்கு

Published on

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை போக்சோ சட்டத்தின் கீழ் பட்டாசுத் தொழிலாளி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சிவகாசி அருகேயுள்ள நதிக்குடியைச் சோ்ந்தவா் முருகன் மகன் சூரியா (24). பட்டாசுத் தொழிலாளியான இவா், அதே ஊரைச் சோ்ந்த 17 வயது சிறுமியைக் காதலித்து திருமணம் செய்துள்ளாா். தற்போது அந்தச் சிறுமி கா்ப்பமாக உள்ளாா்.

இந்த நிலையில், சூரியா, சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்துள்ளதாகவும், அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வெம்பக்கோட்டை வட்ட சமூக நல விரிவாக்க அலுவலா் ஆனந்தஜோதி, சிவகாசி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில், சூரியா மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவாகியுள்ள அவரை தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com