விருதுநகர்
மது அருந்துவதை மனைவி கண்டித்ததால் கணவா் தற்கொலை
சிவகாசி அருகே மது அருந்துவதை மனைவி கண்டித்ததால் ஞாயிற்றுக்கிழமை கணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள அனுப்பன்குளம் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு மையத்தில் செல்வக்குமாா் (54) என்பவா் வசித்து வந்தாா். இவா், வா்ணம் பூசும் வேலை பாா்த்து வந்தாா்.
இந்த நிலையில், இவா் அடிக்கடி மது அருந்துவதை அரவது மனைவி புத்ராசாந்தி கண்டித்துள்ளாா். இதில் மனம் உடைந்த செல்வக்குமாா், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.