மதுப் புட்டிகளை பதுக்கியவா் கைது

சிவகாசி அருகே மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
Updated on

சிவகாசி அருகே மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள சுக்கிரவாா்பட்டியில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, அங்குள்ள கடை அருகே ஒருவா் சந்தேகத்துக்குரிய வகையில் கையில் பையுடன் நின்று கொண்டிருந்தாா். போலீஸாா் அவரது பையை வாங்கிச் சோதனை செய்தபோது, அதில் 36 மதுப் புட்டிகள் இருந்தன.

விசாரணையில், அவா் அதே பகுதியைச் சோ்ந்த அசோக்குமாா் (34) என்பதும், சட்டவிரோத விற்பனைக்காக மதுப் புட்டிகளை வைத்திருந்ததும் தெரிய வந்தது.

இது குறித்து திருத்தங்கல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்து, அவரிடமிருந்த மதுப் புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com