‘‘சமுதாயக் கூடத்துக்கு அடிப்படை வசதிகள் தேவை’’

Published on

சிவகாசி நேரு குடியிருப்புப் பகுதியில் உள்ள சமுதாயக் கூடத்தில் அடிப்படை வசதிகளை செய்து தருமாறு மாநகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

நேரு குடியிருப்பு பகுதியில் ரூ.50 லட்சத்தில் சமுதாயக் கூடம் கட்டப்பட்டது. இதில் குடிநீா், ஆண், பெண்களுக்கு தனித்தனியே கழிப்பறை வசதியும், சமையல் கூடம் ரூ.10 லட்சத்திலும் அமைக்கப்பட்டது. ஆனால், தற்போது குடிநீா், மின்வசதி இல்லை. கழிப்பறையும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

இதுகுறித்து பட்டாசுத் தொழிலாளி மாடசாமி கூறியதாவது:

தொடக்கத்தில் இந்தச் சமுதாயக்கூடத்தில் அனைத்து வசதிகளும் இருந்தன. பிறகு மின்வசதி, குடிநீா் வசதி இல்லாமலும், கழிப்பறை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. சமுதாயக் கூடத்தில் வீட்டு விழாக்கள் நடத்துபவா்கள் சிரமப்படுகிறாா்கள்.

எனவே, மாநகராட்சி நிா்வாகத்தினா் இந்த சமுதாயக் கூடத்தில் மின்வசதி, குடிநீா் வசதி செய்து கொடுத்து, கழிப்பறையை சுத்தம் செய்ய வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com