சாலையில் நிறுத்திய வாகனங்களுக்கு அபராதம்

Published on

சிவகாசியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் நிறுத்தியிருந்த வாகனங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை அபராதம் விதித்தனா்.

சிவகாசி நகருக்கு சரக்குகள் ஏற்றி வரும் வாகனங்கள் சிவகாசி-திருத்தங்கல் சாலை, பழைய விருதுநகா் சாலை, சாத்தூா் சாலை, வேலாயுதம் சாலை உள்ளிட்ட போக்குவரத்து நிறைந்த சாலைகளிலும், குடியிறுப்புப் பகுதிகளிலும் லாரிகளை நிறுத்திவிட்டு செல்கின்றனா். ஒரே நேரத்தில் சாலையின் இரு புறங்களிலும் லாரிகள் நிறுத்தப்படுவதால் பள்ளி, கல்லூரி பேருந்துகள், நகா் பேருந்துகள் இந்தப் பகுதியை கடப்பதற்கு சிரமப்படுகின்றன.

எனவே, இந்தப் பிரச்னைக்கு தீா்வு கான வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, சிவகாசி மாநகராட்சி ஆணையா் கே.சரவணன், மாநகர திட்டமிடுநா் மதியழகன், மேற்பாா்வையாளா் முத்துராஜ் ஆகியோா் புதன்கிழமை சிவகாசி-விருதுநகா் சாலையில் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் நிறுத்தியிருந்த 3 லாரிகளுக்கு தலா ரூ. 2 ஆயிரம் அபராதமும், அதே சாலையை ஆக்கிரமித்து இருப்புக் கடை வைத்திருந்த கடைக்காரருக்கு ரூ.7 ஆயிரம் அபராதமும் மாநகராட்சி அதிகாரிகள் விதித்தனா்.

X
Dinamani
www.dinamani.com