விருதுநகர்
பட்டாசுகள் பதுக்கியவா் கைது
சிவகாசி அருகே அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கீழத்திருத்தங்கல் பகுதியில் ஒரு தகர செட்டில் அனுமதின்றி பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சிவகாசி கிழக்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனையிட்டனா். அப்போது, பால்பாண்டி (48) என்பவா் தனக்கு சொந்தமான இடத்தில் தகர செட் அமைத்து பட்டாசு பண்டல்களை பதுக்கி வைத்திந்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பால்பாண்டியைக் கைது செய்து, அவரிடமிருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்தனா்.