மின்சாரம் பாய்ந்ததில் விசைத்தறி தொழிலாளி உயிரிழப்பு

Published on

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மின்சாரம் பாய்ந்ததில் விசைத்தறி தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் முதலியாா்பட்டி தெருவைச் சோ்ந்த சிவப்பிரகாசம் மகன் வேல்முருகன் (49). விசைத்தறி தொழிலாளியான இவா் வியாழக்கிழமை காலை வழக்கம் போல நெசவுப் பணியில் ஈடுபட்டாா். அப்போது, மின்சாரம் பாய்ந்ததில் அவா் மயங்கி விழுந்தாா். உறவினா்கள் அவரை மீட்டு, ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் வேல்முருகன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்

X
Dinamani
www.dinamani.com