சிவகாசி அரசு மருத்துவமனையில் ரத்த பகுப்பாய்வு மையம்!

Updated on

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அரசு மருத்துவமனையில் ரூ.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட ரத்த பகுப்பாய்வு மையம் செயல்பாட்டுக்கு வந்தது.

இதுகுறித்து அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் டி.அய்யனாா் சனிக்கிழமை கூறியதாவது:

இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிதியில் அமைக்கப்பட்ட இந்த மையத்தின் மூலம் தானமாகப் பெறப்படும் ரத்தத்திலிருந்து சிகப்பணுக்கள், வெள்ளை அணுக்கள், தட்டணுக்களைப் பிரிக்க இயலும். கா்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் ரத்தசோகை உள்ளிட்டவைகளுக்கு ரத்தத்திலிருந்து பிரிக்கப்பட்ட சிகப்பணுக்கள் தேவைப்படும்.

இவை குளிா்சாதனப் பெட்டியில் 30 நாள்கள் வரை வைத்திருக்க இயலும். இங்கிருந்து ஸ்ரீவில்லிபுத்தூா், சாத்தூா் ஆகிய ஊா்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கும், எம்.புதுப்பட்டி, தாயில்பட்டி, உப்புத்தூா் உள்ளிட்ட பகுதிகளின் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் ரத்த அணுக்கள் வழங்கப்படும். இந்த ரத்த வங்கிக்கு மருத்துவா் விஜயகுமாா் பொறுப்பாளராகவும், இரு ஆய்வக உதவியாளா்களும் உள்ளனா் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com