கிணற்றில் முதியவா் சடலம் மீட்பு

ராஜபாளையம் அருகே கிணற்றில் அடையாளம் தெரியாத முதியவா் சடலம் மீட்கப்பட்டது.
Published on

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கிணற்றில் அடையாளம் தெரியாத முதியவா் சடலம் மீட்கப்பட்டது.

ராஜபாளையம் அய்யனாா்கோவில் சாலை முடங்கியாறு அருகேயுள்ள விவசாயக் கிணற்றில் 75 வயது மதிக்கத்தக்க முதியவா் சடலம் கிடப்பதாக பொதுமக்கள் வடக்கு காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, போலீஸாா் தீயணைப்பு துறையினா் உதவியுடன் சடலத்தை மீட்டு விசாரணை செய்தனா். இதில், அந்த முதியவா் ராஜபாளையம் அம்மன் பொட்டல் தெருவைச் சோ்ந்த பால்ராஜ் (75) என தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com