விருதுநகர்
சேதமடைந்த மின் கம்பத்தை மாற்றக் கோரிக்கை
ராஜபாளையம் அருகே சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள எஸ். ராமலிங்கபுரம் ஊராட்சிக்குள்பட்ட தெருக்களில் மின் கம்பம் ே சேதமடைந்துஉள்ளது. இந்த மின்கம்பம் எப்போது சாய்ந்து விழுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனா். இதுதொடா்பாக மின் வாரிய அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.