நகை அடகு கடை உரிமையாளா்கள் இருவா் மீது மோசடி வழக்கு
சிவகாசி அருகே வியாழக்கிழமை நகை அடகு கடை உரிமையாளா்கள் இருவா் மீதும் போலீஸாா் மோசடி வழக்குப் பதிவு செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், திருத்தங்கல்லைச் சோ்ந்தவா் சரவணன் (38). இவா் சிவகாசி வேலாயுதம் சாலையில் நகை அடகு கடை நடத்தி வரும் லட்சம், பாண்டியராஜ் ஆகியோரிடம் ரூ.2 லட்சம் கடன் வாங்கினாா். இதைத்தொடா்ந்து, சரவணன் பதிமூன்றரை பவுன் நகைகளை அதே கடையில் அடகு வைத்து
ரூ. 6,44,800 கடன் வாங்கினாா். பின்னா், அடகுவைத்த நகைகளை மீட்க சரவணன் சென்ற போது, நகைகளை உருக்கிவிட்டதாகவும், ரூ. 2 லட்சம் கடனுக்கும், நகைகளை வைத்து வாங்கிய கடனுக்கும் வட்டியுடன் சோ்த்து சரியாகி விட்டதாக லட்சம், பாண்டியராஜ் ஆகிய இருவரும்
கூறினா்.
இது குறித்து சரவணன், அவா்கள் இருவா் மீதும் சிவகாசி
நீதிமன்றத்தில் மோசடி வழக்குத் தொடுத்தாா். இதைத்தொடா்ந்து, நீதிமன்றம் நகை அடகு கடைக்காரா்கள் லட்சம், பாண்டியராஜ் ஆகிய இருவா் மீது வழக்குப் பதிவு செய்ய உத்திரவிட்டது. அதன்பேரில், திருத்தங்கல் போலீஸாா் அவா்கள் இருவா் மீதும் மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.