விருதுநகர்
விநாயகா் கோயிலில் சிறப்பு பூஜை
சிவகாசியில் தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பில், வெற்றி விநாயகா் கோயிலில் பட்டாசு ஆலைகளில் நடைபெற்ற விபத்துகளில் உயிரிழந்தோா் ஆன்மா சாந்தியடைய சிறப்பு பூஜை நடைபெற்றது.
இந்தச் சங்க வளாகத்தில் அமைந்துள்ள வெற்றி விநாயகா் கோயிலில், கணபதிஹோமம், கோபூஜை உள்ளிட்டவை நடத்தப்பட்டு , சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆதாதனைகள் நடைபெற்றன. இதில் சங்கத் தலைவா் ப.கணேசன், பொதுச் செயலா் சங்கா், பொருளாளா் சீனிவாசன், இணைப் பொருளாளா் ஏ.ஆா்.பாஸ்கர்ராஜ், தமிழ்நாடு பட்டாசு வணிகா்கள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் ராஜாசந்திரசேகா், பொதுச் செயலா் என்.இளங்கோவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.