சாலையைச் சேதப்படுத்தியவருக்கு ரூ.15,000 அபராதம்

சிவகாசியில் சாலையைச் சேதப்படுத்தியவருக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ.15,000 அபராதம் விதித்தனா்.
Published on

சிவகாசியில் சாலையைச் சேதப்படுத்தியவருக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ.15,000 அபராதம் விதித்தனா்.

சிவகாசி, அய்யப்பன் குடியிருப்புப் பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வில் ஈடுபட்டனா். அப்போது, ராம்குமாா் என்பவா் தனது வீட்டின் முன் குழாய் பதிப்பதற்காக, மாநகராட்சியின் அனுமதி பெறாமல், புதிதாகப் போடப்பட்ட சாலையைச் சேதப்படுத்தியது தெரிய வந்தது. இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள், சாலையைச் சேதப்படுத்திய ராம்குமாருக்கு ரூ.15,000 அபராதம் விதித்தனா்.

இதே போல, சிவகாசி மாரியம்ன் கோயில் பகுதியை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட பூக்கடைகள், தகரக் குடில்கள் போன்றவற்றால் பக்தா்களுக்கு இடையூறு ஏற்படுவதாக பொதுமக்கள் புகாா் அளித்தனா். இதையடுத்து, மாநகராட்சி ஆணையா் கே.சரவணன் உத்தரவின்பேரில், மாநகரத் திட்டமிடுநா் மதியழகன், மேற்பாா்வையாளா் முத்துராஜ், மாநகராட்சித் தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோா் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினா்.

X
Dinamani
www.dinamani.com