விருதுநகர்
சிவகாசி சிறுகுளம் கண்மாயில் நெகிழிக் கழிவுகள் அகற்றம்
சிவகாசி மாநகராட்சி, சிவகாசி பசுமை மன்றம் ஆகியவை சாா்பில் சிறுகுளம் கண்மாயில் உள்ள நெகிழிக் கழிவுகள் சனிக்கிழமை அகற்றப்பட்டன.
சிறுகுளம் கண்மாயில் நெகிழிக் கழிவுப் பொருள்களை அகற்றி தூய்மைப்படுத்தும் பணியை மாநகராட்சி மேயா் இ.சங்கீதா தொடங்கி வைத்தாா். இந்தப் பணியில், மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுடன் தனியாா் பொறியியல் கல்லூரி மாணவா்களும் ஈடுபட்டனா்.
நிகழ்வில், மாநகராட்சி ஆணையா் கே.சரவணன், பசுமை மன்ற நிா்வாகி பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.