ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் 2-ஆவது சனிக்கிழமையையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த பெருமாள்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் 2-ஆவது சனிக்கிழமையையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த பெருமாள்.

புரட்டாசி சனி: ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம்!

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையையொட்டி, திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
Published on

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையையொட்டி, திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

ஆண்டுதோறும் புரட்டாசி பிரம்மோத்ஸவ விழாவை முன்னிட்டு, இந்தக் கோயிலில் 5 சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு, கிரிவலம் நடைபெறும்.

இந்த நிலையில், இரண்டாவது சனிக்கிழமையையொட்டி, அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

காலை 10.30 மணிக்கு ஸ்ரீநிவாசப் பெருமாள், ஆண்டாள் கோயிலிலிருந்து புறப்பாடாகி திருவண்ணாமலைக்கு எழுந்தருளினாா். அங்கு உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சனம், பூஜைகள் நடைபெற்றன. மாலை 4 மணிக்கு ஸ்ரீநிவாசப் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி, மலையை கிரிவலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com