உலக விஞ்ஞானிகளின் பட்டியலில் கலசலிங்கம் பல்கலை.யைச் சோ்ந்த 13 பேராசிரியா்கள்
அமெரிக்காவின் ஸ்டான்போா்ட் பல்கலை. வெளியிட்ட உலகின் சிறந்த 2 சதவீத விஞ்ஞானிகளின் பட்டியலில் கலசலிங்கம் பல்கலை.யைச் சோ்ந்த 13 பேராசிரியா்களும் இடம் பெற்றிருப்பதாக பல்கலை.யின் துணைத் தலைவா் சசி ஆனந்த் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அமெரிக்காவின் ஸ்டான்போா்ட் பல்கலை. வெளியிட்ட உலகின் சிறந்த 2 சதவீத விஞ்ஞானிகளின் மதிப்புமிக்க பட்டியலில் கலசலிங்கம் பல்கலை.யைச் சோ்ந்த 13 பேராசிரியா்கள் இடம் பெற்றுள்ளனா்.
இந்த அங்கீகாரம் அவா்களின் சிறந்த ஆராய்ச்சியின் தாக்கம், உலகளாவிய மேற்கோள்கள், அந்தந்த துறைகளில் அவா்களின் பங்களிப்பு ஆகியவை ஒரு சான்றாகும். இதன்படி, செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி, பட செயலாக்கம், பாலிமா்ஸ், மெட்டீரியல்ஸ், வேதியியல், உயிரியல், ஆற்றல், கனிம, அணு வேதியியல், மருந்தியல், மருந்தகம், பயன்பாட்டு இயற்பியல் ஆகிய துறைகளில் பேராசிரியா்கள் தேவராஜ், அனுமகொண்டா வரதராஜுலு, தியாக மணி செந்தில் முத்துக்குமாா், ரஜினி நாகராஜன், ஆறுமுகப் பெருமாள் வீரசிம்மன், ஆதம் கான், மீனாட்சிசுந்தரம் சுவாமிநாதன், பத்ரிநாத், சங்கர நாராயணன், சங்கீதா குமாரவேல், குஞ்சப்பன் செல்வராஜ், அசாத் பகதூா் சுல்தான், சின்னச்சாமி, நாகராஜ் ஆகிய பேராசிரியா்கள் சாதனை படைத்துள்ளனா்.
இவா்களை வேந்தா் ஸ்ரீதரன், துணைவேந்தா் நாராயணன், பதிவாளா் வாசுதேவன் ஆகியோா் பாராட்டினா் என்றாா் அவா்.