கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

Published on

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 2.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் இருவரை கைது செய்தனா்.

மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் போதைப் பொருள்கள் கடத்தல் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது ஸ்ரீவில்லிபுத்தூா் வனவிரிவாக்க மையம் அருகே நின்றிருந்த இருவரை விசாரித்தபோது, விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

இதுதொடா்பாக ஸ்ரீவில்லிபுத்தூா் அய்யம்பட்டி தெருவைச் சோ்ந்த முனியாண்டி மனைவி ராக்கு (72), மதுரை மாவட்டம், திருமங்கலம் என்.ஜி.ஓ. குடியிருப்பைச் சோ்ந்த அழகா்சாமி (48) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 2 கிலோ 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com