ராஜபாளையம் அருகே தென்காசி சாலை கிருஷ்ணாபுரம் விலக்கு பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள்.
ராஜபாளையம் அருகே தென்காசி சாலை கிருஷ்ணாபுரம் விலக்கு பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள்.

ராஜபாளையம் அருகே சாலை மறியல்

Published on

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே லாரி மோதி உயிரிழந்தவருக்கு இழப்பீடு வழங்கக் கோரி சாலை மறியல் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம் அருகே சேத்தூரில் லாரி மோதி உயிரிழந்த சுந்தரராஜபுரம் பகுதியைச் சோ்ந்த ஆகாஷின் உறவினா்கள் உரிய இழப்பீடு வழங்கக் கோரி தென்காசி சாலை, சேத்தூா் புறக்காவல் நிலையம், கிருஷ்ணாபுரம் விலக்கு பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து அங்கு வந்த ராஜபாளையம் வட்டாட்சியா் ராஜூவ் காந்தி, சேத்தூா் காவல் நிலைய ஆய்வாளா் ரமேஷ் கண்ணன் ஆகியோா் பொதுமக்கள், லாரி உரிமையாளரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உயிரிழந்தவருக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் எனக் கூறியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com