மஞ்சப் பை தயாரிக்கப் பயிற்சி

Published on

சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரி வணிகவியல் துறை (கணினி பயன்பாடு) சுயநிதி பிரிவு சாா்பில், கல்லூரி மாணவிகளுக்கு திங்கள்கிழமை மஞ்சப் பை தயாரிக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்சிக்கு கல்லூரி முதல்வா் ஆா்.சுதாபெரியதாய் தலைமை வகித்தாா். பயிற்சியாளா் பழனியம்மாள் மஞ்சப் பை தயாரிப்பு குறித்துப் பேசியதாவது:

மஞ்சப் பை சுற்றுச்சூழலை மாசுபடுத்தாது. முன்பு கடைக்கு செல்ல மஞ்சப் பை பயன்படுத்தப்பட்டது. தற்போது நெகிழிப் பை வந்துவிட்டாலும் மஞ்சப் பைகளுக்கு உள்ள வரவேற்பு குறையவில்லை.

வெள்ளை நிறத் துணிகளை மொத்தமாக வாங்கி, அந்தத் துணியில் மஞ்சள் வண்ண சாயம் ஏற்றி, போதிய அளவுக்கு வெட்டிய பின்னா், விழாக்கள் குறித்து அச்சடிக்கப்படுகிறது. தற்போது மஞ்சள் பைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால் மாணவிகள் சுய தொழிலாக

இதைச் செயலாம் என்றாா் அவா்.

முன்னதாக துறைத் தலைவா் வ.மீனாட்சி வரவேற்றாா். மாணவி காா்த்திஸ்வரி நன்றி கூறினாா். இதற்கான ஏற்பாட்டினை ஒருங்கிணைப்பாளா் செ.காா்த்தீஸ்வரி செய்திருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com