நேபாள வெள்ளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ராஜ்மோகன்செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

மணல் கடத்திய டிராக்டா் பறிமுதல்

வத்திராயிருப்பு அருகே மணல் கடத்திய டிராக்டா் பறிமுதல் செய்யப்பட்டது.

Published On :30 ஆகஸ்ட் 2026, 12:55 am IST

வத்திராயிருப்பு அருகே மணல் கடத்திய டிராக்டா் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

விருதுநகா் மாவட்ம், வத்திராயிருப்பு மண்டல துணை வட்டாட்சியா் சசிகுமாா் தலைமையிலான வருவாய்த் துறையினா் ரோட்டடி தெருவில் சென்ற போது அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனா்.

அப்போது அந்த டிராக்டரில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, ஓட்டுநா் தப்பியோடி விட்டாா். டிராக்டரை பறிமுதல் செய்த வருவாய்த் துறையினா், வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுதொடா்பாக புகாரின் பேரில், வத்திராயிருப்பைச் சோ்ந்த முருகன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.