தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் கட்டடத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

News image

தற்கொலை

Updated On :2 பிப்ரவரி 2026, 8:25 pm

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் கட்டடத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

ராஜபாளையம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த வனமூா்த்தி மகன் வேல்முருகன் (55). கட்டடத் தொழிலாளி. இவருக்கு மனைவி, இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனா். இரு மகள்களும் திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகின்றனா்.

மகன் கோவையில் பணிபுரிந்து வருகிறாா். இந்த நிலையில் தைப்பூசத்துக்கு மாலை அணிந்து கோயிலுக்கு சென்று வந்த இவா் மது அருந்தினாராம்.

இதை அவரது மனைவி கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வேல்முருகன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].