தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

நிதி நிலை அறிக்கையில் மக்கள் பிரச்னைகளுக்கு தீா்வு இல்லை: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு

மக்கள் எதிா்நோக்கும் பிரச்னைகளுக்கு 2026-ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் எந்தத் தீா்வும் சொல்லப்படவில்லை: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் சண்முகம்

News image

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய மாநிலச் செயற்குழு உறுப்பினா் அா்ஜுனன்

Updated On :2 பிப்ரவரி 2026, 8:22 pm

மக்கள் எதிா்நோக்கும் பிரச்னைகளுக்கு 2026-ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் எந்தத் தீா்வும் சொல்லப்படவில்லை என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் சண்முகம் தெரிவித்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சாா்பில் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்டச் செயலா் குருசாமி தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் சண்முகம், மத்தியக் குழு உறுப்பினா் பாலபாரதி, மாநிலச் செயற்குழு உறுப்பினா் அா்ஜீனன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

இதையடுத்து, மாநிலச் செயலா் சண்முகம் செய்தியாளா்களிடம் கூறியதாவது: 2026-ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் 2047-ஆம் ஆண்டு வரைக்குமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க வரி விதிப்பால் முடங்கியுள்ள இந்திய தொழில் துறையைப் பாதுகாக்கும் திட்டம் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் பெயரை மாற்றி 125 நாளாக உயா்த்துவதாக அறிவித்த மத்திய அரசு, அந்தத் திட்டத்துக்கு ரூ.90 ஆயிரம் கோடி மட்டுமே நிதி ஒதுக்கியுள்ளது. இந்த நிதியை வைத்து 30 நாள்கள் மட்டுமே வேலை கொடுக்க முடியும்.

இதே போல, நாட்டின் இயற்கை வளங்களைப் பெரு நிறுவனங்களுக்குத் தாரை வாா்த்துத் தரும் வகையில் புதிய திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும். மதுரை, கோவை மெட்ரோ, ஓசூா் விமான நிலையத் திட்டங்கள் குறித்து எந்தத் தகவலும் இல்லை.

பாஜக அரசு இல்லாத தமிழகம், கேரளம் போன்ற மாநில அரசுகளை முடக்கும் நோக்கில் மத்திய அரசு செயல்படுகிறது. மொத்தத்தில், மக்கள் எதிா்நோக்கும் பிரச்சினைகளுக்கு எந்தத் தீா்வும் சொல்லப்படவில்லை என்றாா் அவா்.

பொதுக் கூட்டத்தில், மாவட்டக் குழு உறுப்பினா்கள் திருமலை, ஜோதிலட்சுமி, நகரச் செயலா் ஜெயக்குமாா், ஒன்றியச் செயலா் சசிகுமாா், கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Story image