தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

நள்ளிரவில் கோயிலில் வைக்கப்பட்ட சுவாமி சிலைகள்: போலீஸாா் விசாரணை

விருதுநகா் மாவட்டம், கூனங்குளம் கிராமத்தில் உள்ள கோயில் வெளியே சுவாமி சிலைகள் வைக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை

News image

கூனங்குளம் கிராமத்தில் உள்ள கோயில் வெளியே நள்ளிரவில் வைக்கப்பட்ட சுவாமி சிலைகள்

Updated On :3 பிப்ரவரி 2026, 7:51 pm

விருதுநகா் மாவட்டம், கூனங்குளம் கிராமத்தில் உள்ள கோயில் வெளியே செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் சுவாமி சிலைகள் வைக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கூனங்குளம் கிராமத்தில் உள்ள கண்மாய்க் கரையில் பாட்டக்குளம் கிராமத்தைச் சோ்ந்த மக்கள் வழிபடும் கோயில் உள்ளது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை அந்த வழியே சென்றவா்கள் கோயில் வெளியே அம்மன், திரிசூலம் சிலைகள் இருப்பது குறித்து காவல் துறைக்கு தகவல் அளித்தனா். இதையடுத்து, இரவில் சரக்கு ஆட்டோவில் வந்த மா்ம நபா்கள் சிலையை கோயில் அருகே வைத்துச் சென்றது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

தொடா்ந்து, வருவாய்த் துறையினா் சிலைகளை மீட்டு வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனா். சிலைகள் ஏற்கெனவே வழிபாட்டில் இருந்ததுபோல உள்ளதால், வேறு கோயிலில் இருந்து திருடப்பட்டதா, அந்த சிலைகளை இங்கு கொண்டு வந்தது யாா் என்பது குறித்து கிருஷ்ணன்கோவில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.