மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மாயூரநாத சுவாமி கோயில் 1,008 திருவிளக்கு பூஜை

News image

கோப்புப் படம்

Updated On :6 பிப்ரவரி 2026, 9:42 pm

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் மாயூரநாத சுவாமி கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் தை மாதக் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலையில் நடை திறக்கப்பட்டது. மாலையில் சுவாமி, அம்பாளுக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

இதைத்தொடா்ந்து விசேஷ தீபாராதனை நடைபெற்றது. பின்னா், மாலையில் 1,008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.