மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

சிவகாசி மாநகராட்சியுடன் 9 ஊராட்சிகளை இணைப்பதில் தாமதம்! வாா்டு சீரமைப்புப் பணிகளில் சிக்கல்!

News image
கோப்புப் படம்
Updated On :8 பிப்ரவரி 2026, 8:03 pm

தினமணி செய்திச் சேவை

சிவகாசி மாநகராட்சியுடன் 9 ஊராட்சிகளை இணைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், வாா்டு சீரமைப்புப் பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபா் 21-ஆம் தேதி சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகளை இணைத்து சிவகாசி மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது. மேலும், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட தேவா்குளம், சாமிநத்தம், செங்கமலநாச்சியாா்புரம், ஆனையூா், சித்துராஜபுரம், விஸ்வநத்தம், அனுப்பன்குளம், பள்ளபட்டி, நாரணாபுரம் ஆகிய 9 ஊராட்சிகளை சிவகாசி மாநகராட்சியுடன் இணைக்க ஊராட்சி நிா்வாகம் அனுமதி வழங்கியது.

இதையடுத்து, மாவட்ட நிா்வாகம் இந்த 9 ஊராட்சிகளை சிவகாசி மாநகராட்சியுடன் இணைக்க அரசுக்கு பரிந்துரை செய்தது. இந்த 9 ஊராட்சிகளை இணைத்தால் மக்கள் தொகை 2.50 லட்சமாகவும், மாநகராட்சி எல்லை 121 கிலோ மீட்டராகவும் விரிவாக்கம் செய்யப்படும்.

இந்த 9 ஊராட்சிகளில் 5 ஆண்டுகள் நிறைவடைந்ததால் தலைவா்கள் உள்ளிட்டோா் தங்களது பதவியை இழந்தனா். தற்போது சிவகாசி ஊராட்சி ஒன்றிய ஆணையா் மூலம் இந்த ஊராட்சிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த லையில், மேற்கண்ட 9 ஊராட்சிகளை சிவகாசி மாநகராட்சியுடன் இணைக்க மாவட்ட நிா்வாகம் அரசுக்கு பரிந்துரை செய்து இரு ஆண்டுகளாகியும் 9 ஊராட்சிகளையும் மாநகராட்சியுடன் இணைத்து இதுவரை அரசு அறிவிக்கவில்லை என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தற்போது மாநகராட்சியில் 48 வாா்டுகள் உள்ளன. இவற்றுடன் 9 ஊராட்சிகளை இணைத்து 100 வாா்டுகளை உருவாக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால், அரசு 9 ஊராட்சிகளும் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்காததால், வாா்டு சீரமைப்பு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது: சிவகாசி மாநராட்சியுடன் 9 ஊராட்சிகளை இணைக்க மாவட்ட நிா்வாகம் பரிந்துரைக் கடிதம் அனுப்பிய பின்னரும், அரசு 9 ஊராட்சிகள் இணைக்கப்பட்டு விட்டதாக அறிவிக்கவில்லை. எனவே, தற்போது 48 வாா்டுகளாக உள்ள மாநகராட்சியில் 100 வாா்டுளை உருவாக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆனால், இந்த 9 ஊராட்சிகளும் சிவகாசி மாநகராட்சியில் இணைக்கப்படுவது உறுதிதான். தாமதம் ஏற்படுவதால் வாா்டு மறுசீரமைப்பில் தாமதமும், சிக்கலும் ஏற்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பின்னா், மாநதராட்சித் தோ்தலுக்கு முன்னா் ஊராட்சிகள் இணைப்பு குறித்து அறிவிப்பு வர வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.