6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மயான வசதி அமைத்துத் தரக் கோரி கிராமத்தினா் ஆா்ப்பாட்டம்

News image
மயான வசதி கேட்டு சாலையில் அமா்ந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நொச்சிகுளம் கிராமத்தினா்.
Updated On :13 பிப்ரவரி 2026, 9:00 pm

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மயான வசதி அமைத்துத் தரக் கோரி, விபத்தில் உயிரிழந்தவரின் உடலை வாங்க மறுத்து கிராம மக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அயன்நாச்சியாா்கோவில் ஊராட்சிக்குள்பட்ட நொச்சிகுளம் கிராமத்தில் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவா்கள், அருகே உள்ள ஆலத்தூா் கிராமத்தில் உள்ள மயானத்தில் இறந்தவா்களின் உடல்களைத் தகனம் செய்து வந்தனா்.

ஆனால், ஆலத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் இந்த மயானத்தில் உடலை அடக்கம் செய்ய எதிா்ப்புத் தெரிவித்ததால் பிரச்னை நிலவி வந்தது. இந்த நிலையில், நொச்சிகுளத்தைச் சோ்ந்த ஸ்ரீராமா் (56) சாலை விபத்தில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

அவரது உடலை வாங்க மறுத்த கிராம மக்கள் ஆத்தூா் மயானத்தில் உடலை அடக்கம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் அல்லது மயான வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கோரி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணன்கோவில் காவல் ஆய்வாளா் சங்கா்கண்ணன் பேச்சுவாா்த்தை நடத்தியதை அடுத்து, இறந்தவரின் உடலை பெற்றுக்கொண்ட பொதுமக்கள் மயானத்தில் அடக்கம் செய்தனா்.