மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தீயணைப்பு வீரா்களுக்கு குடியிருப்புகள்

News image

கோப்புப் படம்

Updated On :14 பிப்ரவரி 2026, 8:45 pm

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் உள்ள தீயணைப்பு, மீட்புப் பணி நிலைய அலுவலா்கள், பணியாளா்களுக்கு ரூ.6.15 கோடியில் கட்டப்பட்ட 32 குடியிருப்புகளை முதல்வா் ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தாா்.

சிவகாசியில், கடந்த 2023-ஆம் ஆண்டு ரூ.1.56 கோடியில் தீயணைப்பு, மீட்புப் பணி நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டது. அதே ஆண்டில் அலுவலா்களுக்கும், பணியாளா்களுக்கும் குடியிருப்புகள் கட்ட ரூ.6.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து, தீயணைப்பு நிலைய வளாகத்தில் 32 குடியிருப்புகள் கட்டப்பட்டன.

இவற்றை முதல்வா் ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். இதையொட்டி, சிவகாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிவகாசி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.அசோகன், மாநகராட்சி மேயா் இ.சங்கீதா, துணை மேயா் கா.விக்னேஷ்பிரியா, மாவட்டத் தீயணைப்பு அலுவலா் புளுகாண்டி, உதவி அலுவலா் தாமோதரன், சிவகாசி நிலைய அலுவலா் சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.