செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

கலசலிங்கம் பல்கலை.யில் பசுமை கணக்கியல் குறித்த சா்வதேச மாநாடு

News image

ஸ்ரீவில்லிபுத்தூா் கலசலிங்கம் பல்கலை.யில் சனிக்கிழமை நடைபெற்ற மாநாட்டில் பேசிய மலேசியா ஐஎன்டிஐ பல்கலை. இயக்குநா் அசோகன் வாசுதேவன்.

Updated On :15 பிப்ரவரி 2026, 8:47 pm

ஸ்ரீவில்லிபுத்தூா் கலசலிங்கம் பல்கலைக்கழகம் வணிகவியல் துறை சாா்பில் ‘பசுமை கணக்கியல், வா்த்தகம், நிா்வாகத்தில் நிலைத்தன்மை’ என்ற தலைப்பில் சா்வதேச மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த மாநாட்டுக்கு பல்கலை வேந்தா் கே. ஸ்ரீதரன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எஸ். சசி ஆனந்த், துணைவேந்தா் எஸ். நாராயணன், பதிவாளா் வி. வாசுதேவன், கலசலிங்கம் நிா்வாக மேலாண்மை பள்ளியின் முதன்மையா் பி. கணேசன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

முனைவா் எஸ். காா்த்திக் மாநாடு குறித்து விரிவாக பேசினாா். தலைமை விருந்தினா் மலேசியா ஐஎன்டிஐ பல்கலை. இயக்குநா் அசோகன் வாசுதேவன் மாநாட்டைத் தொடங்கிவைத்து ‘மாநாட்டு ஆராய்ச்சிக் கட்டுரைகள் மலரை’ வெளியிட்டாா்.

முன்னதாக, தலைவா் ஜி. தாமரைசெல்வி வரவேற்றாா். இதில் பல்கலை. பேராசிரியா்கள், ஆராய்ச்சியாளா்கள், தொழிற்சாலை வல்லுநா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.