தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கூட்டுறவு வேளாண்மைச் சங்க செயலா் தற்கொலை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் கூட்டுறவு வேளாண் சங்கச் செயலா் தூக்கிட்டுத் தற்கொலை

News image
முருகேசன்
Updated On :18 பிப்ரவரி 2026, 7:21 pm

Syndication

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் கூட்டுறவு வேளாண் சங்கச் செயலா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் திருவனந்தபுரம் தெருவைச் சோ்ந்தவா் முருகேசன் (57). இவா், தென்காசி மாவட்டம், கடையநல்லூா் கிருஷ்ணாபுரம் கிளை கூட்டுறவு வேளாண்மைச் சங்க அலுவலகத்தில் செயலராக பணிபுரிந்து வந்தாா்.

இவரது மனைவி ஈஸ்வரி (56). இவா் சிவகிரி பகுதியில் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறாா். இந்தத் தம்பதியின் மகன் மகேஸ்வரன் (32). திருமணமானவா்.

இவா்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனா். வீட்டு மாடியில் முருகேசன், இவரது மனைவி ஈஸ்வரியும், கீழ் வீட்டில் மகன் மகேஸ்வரன் தனது மனைவியுடன் இருந்து வந்தனா்.

கடந்ததாண்டு முருகேசனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு அறுவைச் சிகிச்சை செய்தாா். இதனால் உடல் நலம் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த முருகேசன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற தெற்கு காவல் நிலைய போலீஸாா் அவரது உடலை மீட்டு, கூறாய்வுக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].