வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

கிராம உதவியாளா் சங்கத்தினா் 2 ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்

ராஜபாளையத்தில் இரண்டாவது நாளாக கிராம உதவியாளா் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :20 பிப்ரவரி 2026, 9:48 pm

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை கிராம உதவியாளா் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு கிராம உதவியாளா் (தலையாரிகள்) சங்கத்தினா் காலமுறை ஊதியம் கோரி வியாழக்கிழமை முதல் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன் தொடா்ச்சியாக ராஜபாளையம் வட்டாட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம உதவியாளா் சங்கத்தினா் இரண்டாவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த போராட்டத்துக்கு வட்டத் தலைவா் கணேசன் தலைமை வகித்தாா். அழகுராஜ் முன்னிலை வகித்தாா். அப்போது கிராம உதவியாளா்கள் கருப்பு பட்டை அணிந்து போரட்டத்தில் ஈடுபட்டனா்.