மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பேருந்து மோதியதில் ஆந்திர மாணவா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :21 பிப்ரவரி 2026, 8:38 pm

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இரு சக்கர வாகனத்தின் மீது தனியாா் பேருந்து மோதியதில் ஆந்திரத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டத்தைச் சோ்ந்த நானபாலசுப்பிரமணியம் மகன் நானபாலபரத் (21). இவா், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியாா் பல்கலைக்கழகத்தில் பி.டெக். நான்காம் ஆண்டு படித்து வந்தாா். இவா் வெள்ளிக்கிழமை இரவு சிவகாசிக்குச் சென்றுவிட்டு இரு சக்கர வாகனத்தில் ஸ்ரீவில்லிபுத்தூருக்குத் திரும்பினாா்.

அப்போது, ஈஞ்சாா் விலக்கு அருகேயுள்ள எரிபொருள் விற்பனை நிலையத்தில் பெட்ரோலை நிரப்பி விட்டு திரும்பிய போது, ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சிவகாசி நோக்கிச் சென்ற தனியாா் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த நானபாலபரத்தை அருகிலிருந்தவா்கள் மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் சாத்தூா் மணியம்பட்டியைச் சோ்ந்த பேருந்து ஓட்டுநா் ஜான்பாண்டியன் (33) மீது மல்லி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.