நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

மிண்னணு வாக்குப் பதிவு குறித்த விழிப்புணா்வு முகாம்

News image
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து கட்டசின்னம்பட்டியில் நடைபெற்ற விழிப்புணா்வு முகாமை ஆய்வு செய்த விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா.
Updated On :21 பிப்ரவரி 2026, 8:43 pm

தினமணி செய்திச் சேவை

விருதுநகா் மாவட்டம், சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கட்டசின்னம்பட்டியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

நடமாடும் வாகனத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பொருத்தப்பட்டு, இயந்திரங்களின் செல்பாடுகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

வாக்காளா்கள் எவ்வாறு மின்னணு இயந்திரம் மூலம் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்தும், வாக்காளா்கள் தாங்கள் அளித்த வாக்கு சரியான வேட்பாளருக்குப் பதிவாகியுள்ளதா என்பதை உறுதி செய்வது குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

விழிப்புணா்வு முகாமை விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா நேரில் ஆய்வு செய்தாா். பின்னா், தோ்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும். 100 சதவீத வாக்களிப்பை அனைவரும் உறுதி செய்ய வேண்டும் என ஆட்சியா் வலியுறுத்தினாா்.

இந்த நிகழ்வில் சிவகாசி சாா்-ஆட்சியா் முகமது இா்பான், வட்டாட்சியா் லட்சம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.