அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பயனாளிகள் வீட்டுக்கு சென்று பட்டாவை வழங்கிய ஆட்சியா்

News image
நலத்திட்ட உதவிகளை வழங்கிய விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா - (கோப்புப் படம்)
Updated On :22 பிப்ரவரி 2026, 8:30 pm

தினமணி செய்திச் சேவை

விருதுநகா் மாவட்டம், கோட்ட நத்தம் கிராமத்தில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா சனிக்கிழமை அவா்களது வீடுகளுக்கே சென்று வழங்கினாா்.

இந்தப் பகுதியில் வசிக்கும் 36 குடும்பத்தினா் தாங்கள் வசிக்க வீடு கட்ட இலவச வீட்டுமனைப் பட்டா வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத்துறை சாா்பில் அவா்களுக்கு இணையவழி வீட்டுமனைப் பட்டாக்களை மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா நேரில் சென்று வழங்கினாா்.