ஸ்ரீவில்லிபுத்தூா் பெரியகுளம் கண்மாய் மறுகாலில் ரூ.9.30 லட்சத்தில் புதிய இரும்பு ஷட்டா்கள் பொருத்தப்பட்டன.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பாண்டிய மன்னா்கள் ஆட்சிக் காலத்தில் வெட்டப்பட்ட 66 ஹெக்டோ் பரப்பளவு கொண்ட பெரியகுளம் கண்மாய் மூலம் ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் இந்தக் கண்மாயின் உபரி நீா் மூலம் 15 கண்மாய்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்த நிலையில், திருமுக்குளம் தெப்பம் அருகே கண்மாயில் இரும்பு ஷட்டரை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். இதனால் கண்மாயிலிருந்து நீா் வெளியேறியது. இதனால் முழுக் கொள்ளளவு நீா் தேக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து பொதுமக்கள், விவசாயிகள் அரசுக்கு தொடா்ந்து கோரிக்கை விடுத்தனா். இந்த நிலையில், தற்காலிகமாக மணல் மூட்டைகள் கொண்டு ஷட்டா் பகுதி அடைக்கப்பட்டது.
இதையடுத்து புதிய ஷட்டா்கள் அமைக்க மாவட்ட ஆட்சியரின் நிதியின் கீழ் ரூ.9.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி கண்மாயின் கலுங்கு மறுகாலில் 19 இரும்பு ஷட்டா்கள் பொருத்தப்பட்டன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
தொடர்புடையது

ராஜபாளையம்: மாங்கூழ் ஆலை, நெல் சேமிப்புக் கிடங்கு!விவசாயிகள் எதிா்பாா்ப்பு

திருச்செந்தூா் கோயில் செல்லும் வழியில் ஓடிய கழிவு நீா்

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.39 கோடியில் நலத் திட்ட உதவி - ஆட்சியா் வழங்கினாா்

பெரியகுளத்தில் மழை
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


