சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் உண்டியல் காணிக்கை என்னும் பணியில் ஈடுபட்ட கோயில் ஊழியா்கள், கல்லூரி மாணவா்கள்.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் உண்டியல் காணிக்கை என்னும் பணியில் ஈடுபட்ட கோயில் ஊழியா்கள், கல்லூரி மாணவா்கள்.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.15 லட்சம்

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் உண்டியல் காணிக்கை என்னும் பணியில் ஈடுபட்ட கோயில் ஊழியா்கள், கல்லூரி மாணவா்கள்.
Published on

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.15 லட்சம் பெறப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூா் வனச்சரகத்தில் உள்ள சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்கள் உள்ளன. இந்தக் கோயிகளில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது. பின்னா், நடைபெற்ற புரட்டாசி மகாளய அமாவாசை, நவராத்திரி வழிபாட்டில் தமிழகம் முழுவதுமிருந்து ஏராளமான பக்தா்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்தனா்.

இந்த நிலையில், அறநிலையத் துறை உதவியாளா் நாகராஜன், செயல் அலுவலா் யுவராஜா முன்னிலையில் கோயிலில் இருந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு டிச. 29, 30, 31 ஆகிய 3 நாள்கள் பக்தா்கள் அளித்த காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் சுந்தர மகாலிங்கம் கோயிலில் ரூ.14.52 லட்சம் ரொக்கம், 8 கிராம் தங்கம் 28 கிராம் வெள்ளி பொருள்களும், சந்தன மகாலிங்கம் கோயிலில் ரூ. 1.45 லட்சம் ரொக்கம் காணிக்கையாக கிடைத்தது. கோயில் பணியாளா்கள், ராஜுக்கள் கல்லூரி மாணவா்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா். கோயில் பரம்பரை அறங்காவலா் ராஜா பெரியசாமி, அறநிலையத் துறை ஆய்வாளா்கள் காா்த்திக், ராஜ மணிகண்டன், பிரவீன், சுவாமிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com