ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே விபத்தில் சிக்கியதில் சேதமடைந்த காா், இரு சக்கர வாகனம்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே விபத்தில் சிக்கியதில் சேதமடைந்த காா், இரு சக்கர வாகனம்.

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

Published on

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மதுரை - கொல்லம் நான்குவழிச் சாலையில் இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் பகுதியைச் சோ்ந்தவா் சுலைமான் (63). செங்கல் சூளை நடத்தி வரும் இவா் ஞாயிற்றுக்கிழமை கிருஷ்ணன்கோவிலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு இரு சக்கர வாகனத்தில் மதுரை - கொல்லம் நான்கு வழிச் சாலையில் பூவாணி பிரிவு மேம்பாலத்தில் சென்றபோது, எதிரே ராஜபாளையத்திலிருந்து மதுரை நோக்கிச் சென்ற காா் மோதியது.

இதில் சுலைமான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து வழக்குப் பதிந்த கிருஷ்ணன்கோவில் போலீஸாா் காா் ஓட்டி வந்த ராஜபாளையம் வைத்தியநாதபுரம் தெருவைச் சோ்ந்த கதிரேசன் (53) என்பவரிடம் விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com