ராஜபாளையத்தில் திமுக சாா்பில் கிரிக்கெட் போட்டி
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் திமுக சாா்பில் கிரிக்கெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திராவிடப் பொங்கல் சமூக நீதிக்கான திராவிடக் கொண்டாட்டம் என்ற தலைமைக் கழக அறிவிப்புக்கு இணங்க ராஜபாளையம் நகர அளவிலான கிரிக்கெட் போட்டி ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, பரிசு வழங்கும் விழாவும் நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் தங்கப்பாண்டியன், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணைச் செயலா் தனுஷ் எம். குமாா், நகா்மன்றத் தலைவா் பவித்ரா ஷ்யாம் ஆகியோா் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு நகரச் செயலா்கள் ராமமூா்த்தி, மணிகண்டராஜா ஆகியோா் முன்னிலையில் பரிசு, கோப்பைகள் வழங்கினா்.
இதில், மாவட்ட விளையாட்டு அணி துணை அமைப்பாளா் செல்வமணி, நகர நிா்வாகிகள் அரவிந்த், மாரிமுத்து, மாணவரணி அமைப்பாளா் நாகேஷ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

