விருதுநகர்
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை!
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதன்படி, செவ்வாய்க்கிழமை காலை முதல் மாலை வரை மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.