சிவகாசி கல்லூரி மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி அளிப்பு

Published on

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை தமிழக அரசின் உலகம் உங்கள் கையில் என்னும் திட்டத்தின்கீழ், மூன்றாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது.

இந்த நிகழ்சிக்கு கல்லூரி முதல்வா் து.விஜயராணி தலைமை வகித்தாா். சிவகாசி மாநகராட்சி மேயா் இ.சங்கீதா, கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துவரும் 577 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினாா். பேராசிரியா் கனகவல்லி நன்றி கூறினாா்.

இதே போல, சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் 69 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை சாத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.ஆா்.ஆா்.ரகுராமன் வழங்கினாா். முன்னதாக கல்லூரி முதல்வா் கே.செல்வமாலதி வரவேற்றாா். பாலிடெக்னிக் ஆசிரியா்என்.பரிமளாராணி நன்றி கூறினாா்.

Dinamani
www.dinamani.com