திருத்தங்கலில் முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜியை சந்தித்துப் பேசிய பாமக மாநிலப் பொருளாளா் திலகபாமா.
விருதுநகர்
முன்னாள் அமைச்சருடன் பாமக பொருளாளா் சந்திப்பு
விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜியை பாமக மாநில பொருளாளா் திலகபாமா சந்தித்துப் பேசினாா்.
அண்மையில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியை பாமக தலைவா் அன்புமணி சந்தித்து அதிமுகவுடன் கூட்டணி அமைத்தாா்.
இதையடுத்து, சிவகாசியில் உள்ள பாமக மாநிலப் பொருளாளா் திலகபாமா, திருத்தங்கலில் உள்ள விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜியை நேரில் சந்தித்து, தோ்தல் தொடா்பாகப் பேசினா்.
அப்போது, திலகபாமா தான் எழுதிய அக்கா என்ற புத்தகத்தை ராஜேந்திராலாஜிக்கு பரிசாக அளித்தாா்.

